/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஹாட்ரிக் 'ஹீரோ' பாட்ரிக்... * ஆஸி., அணி 'மேஜிக்' * வங்கதேசத்துக்கு 'செக்'ஹாட்ரிக் 'ஹீரோ' பாட்ரிக்... * ஆஸி., அணி 'மேஜிக்' * வங்கதேசத்துக்கு 'செக்'
ஹாட்ரிக் 'ஹீரோ' பாட்ரிக்... * ஆஸி., அணி 'மேஜிக்' * வங்கதேசத்துக்கு 'செக்'
ஹாட்ரிக் 'ஹீரோ' பாட்ரிக்... * ஆஸி., அணி 'மேஜிக்' * வங்கதேசத்துக்கு 'செக்'
ஹாட்ரிக் 'ஹீரோ' பாட்ரிக்... * ஆஸி., அணி 'மேஜிக்' * வங்கதேசத்துக்கு 'செக்'
ADDED : ஜூன் 21, 2024 10:47 PM

ஆன்டிகுவா: 'சூப்பர்-8' போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 'டக்வொர்த்- லீவிஸ்' விதிப்படி, 28 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது. பாட் கம்மின்ஸ் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி சாதித்தார்.
ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் ('குரூப்-1') மோதிய 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்று போட்டி நேற்று ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டு மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார்.
கம்மின்ஸ் கலக்கல்
வங்கதேச அணிக்கு தன்ஜித்(0) ஏமாற்றினார். முதலில் வீசப்பட்ட 12 பந்தில் 4 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஜாம்பா சுழலில் லிட்டன் தாஸ் (16), கேப்டன் ஷாண்டோ (41) அவுட்டாக்கினர்.
ஸ்டாய்னிஸ் வேகத்தில் 'சீனியர்' சாகிப் அல் ஹசன் (8) வீழ்ந்தார். 18 வது ஓவரை வீசிய பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் (சுருக்கமாக பாட் கம்மின்ஸ்), கடைசி இரு பந்தில் மகமதுல்லா (2), மெஹதி ஹசனை (0) அவுட்டாக்கினார். பின் 20வது ஓவரை வீசினார் கம்மின்ஸ். இதன் முதல் பந்தில் தவ்ஹித்தை (40) அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்தது.
வார்னர் அரைசதம்
சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், டிராவிஸ் ஹெட் ஜோடி 'மின்னல்' வேக துவக்கம் தந்தது. மழை அபாயம் இருந்ததால், வேகமாக ரன் சேர்த்தது. 6.5 ஓவரில் 65 ரன் எடுத்த போது ஹெட் (31) அவுட்டானார். மிட்சல் மார்ஷ் (1) ஏமாற்றினார். வார்னர் அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவரில் 100/2 ரன் எடுத்த போது, மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. வார்னர் (53), மேக்ஸ்வெல் (14) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ய, 'டக்வொர்த்- லீவிஸ்' விதிப்படி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2
நேற்று மகமதுல்லா (18.5வது ஓவர்), மெஹதி ஹசன் (18.6), தவ்ஹித்தை (19.1) அவுட்டாக்கிய கம்மின்ஸ், இந்த 'டி-20' உலக தொடரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த முதல் பவுலர் ஆனார்.
* பிரட் லீக்கு (2007, எதிர்-வங்கதேசம்) அடுத்து 'டி-20' உலக தொடரில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த இரண்டாவது ஆஸ்திரேலிய பவுலர் ஆனார். ஒட்டுமொத்தமாக 7வது வீரரானார். முன்னதாக பிரட் லீ, அயர்லாந்தின் காம்பெர் (2021, எதிர்-நெதர்லாந்து), ஜோஷ் லிட்டில் (2022, நியூசி.,), இலங்கையின் ஹசரங்கா (2021, தென் ஆப்ரிக்கா), தென் ஆப்ரிக்காவின் ரபாடா (2021, இங்கிலாந்து), எமிரேட்சின் கார்த்திக் மெய்யப்பன் (2022, இலங்கை) 'ஹாட்ரிக்' நிகழ்த்தினர்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் பிரட் லீ, ஆஷ்டன் ஏகார், நாதன் எல்லிசிற்கு அடுத்து 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த நான்காவது ஆஸ்திரேலிய பவுலரானார் கம்மின்ஸ்.
மலிங்காவை முந்திய ஸ்டார்க்
ஒட்டுமொத்த உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் இலங்கையின் மலிங்காவை முந்தி முதலிடம் பிடித்தார் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க். இவர், ஒருநாள் உலக கோப்பையில் 65 (28 போட்டி), 'டி-20' உலககோப்பையில் 30 (24ல்) என மொத்தம் 52 போட்டியில் 95 விக்கெட் சாய்த்துள்ளார்.
மலிங்கா (56+38=94 விக்.,), வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (43+49=91 விக்.,) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். இந்தியாவின் முகமது ஷமி (55+14=69 விக்.,) 8வது இடத்தில் உள்ளார்.