Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அடிச்சு துாக்கிய ஷாய் ஹோப்... * 'ஈசியா' வென்ற வெஸ்ட் இண்டீஸ்

அடிச்சு துாக்கிய ஷாய் ஹோப்... * 'ஈசியா' வென்ற வெஸ்ட் இண்டீஸ்

அடிச்சு துாக்கிய ஷாய் ஹோப்... * 'ஈசியா' வென்ற வெஸ்ட் இண்டீஸ்

அடிச்சு துாக்கிய ஷாய் ஹோப்... * 'ஈசியா' வென்ற வெஸ்ட் இண்டீஸ்

ADDED : ஜூன் 22, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
பார்படாஸ்: 'சூப்பர்-8' போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், அமெரிக்காவை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பார்படாசில் நடந்த 'சூப்பர்-8' சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்க அணிகள் மோதின. இரு அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ், பீல்டிங் தேர்வு செய்தது.

சேஸ் அபாரம்

அமெரிக்க அணிக்கு ஸ்டீபன் டெய்லர் (2), ஆன்ட்ரிஸ் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. நிதிஷ் குமார் (20), ஆன்ட்ரிஸ் (29) அடுத்தடுத்து அவுட்டாக, கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் (11), கோரி ஆண்டர்சன் (7) ஏமாற்றினர். பின் வரிசையில் மிலிந்த் குமார் (19), ஷாத்லே (18) சற்று கைகொடுத்தனர். அமெரிக்க அணி 19.5 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராஸ்டன் சேஸ், ஆன்ட்ரி ரசல் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

எளிய வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், சார்லஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. சார்லஸ் 14 பந்தில் 15 ரன் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ஹோப், சிக்சர் மழை பொழிந்தார். அலி கான், ஷாத்லே, ஹர்மீத் சிங் என ஒவ்வொருவர் வீசிய பந்தையும் சிக்சருக்கு அடிச்சு துாக்கினார். தொடர்ந்து மிரட்டிய ஹோப், மிலிந்த் வீசிய 9 வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார்.

இவருடன் சேர்ந்த பூரன், சவுரப் நேத்ராவல்கர் ஓவரில் 2 சிக்சர் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 130/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப் (82), பூரன் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின சவால்

'சூப்பர்-8' சுற்று 'பிரிவு 2ல்' இருந்து அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் இரு போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்தை வென்று 4 புள்ளியுடன், பட்டியலில் 'டாப்' ஆக உள்ளது.

* அடுத்த இரு இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (2), இங்கிலாந்து (2) உள்ளன. அமெரிக்கா (0, -2.908) கடைசியாக உள்ளது.

* இன்று இங்கிலாந்து (0.412), அமெரிக்காவை குறைந்தது 10 ரன் வித்தியாசத்தில் வென்றால், 4 புள்ளியுடன், ரன் ரேட்டில் தென் ஆப்ரிக்காவை முந்தி முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு செல்லலாம். அமெரிக்கா வெளியேறும்.

* நாளை தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ளன.

* இதில் வெஸ்ட் இண்டீஸ் (4) வென்றால், தென் ஆப்ரிக்காவுடன் (4) சேர்ந்து சம புள்ளியில் இருக்கும். அதிக ரன்ரேட் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் (1.814), தென் ஆப்ரிக்காவை (ரன் ரேட் 0.625) முந்தி, அரையிறுதிக்கு செல்லும். தென் ஆப்ரிக்கா வெளியேறலாம்.

* இதனால் தென் ஆப்ரிக்கா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us