/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூன் 18, 2024 10:38 PM

துபாய்: ஒருநாள் தரவரிசையில் 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 715 புள்ளியுடன் 2 இடம் முன்னேறி, 'நம்பர்-3' இடம் பிடித்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 117 ரன் விளாசி வெற்றிக்கு கைகொடுத்ததை அடுத்து இந்த முன்னேற்றம் கிடைத்தது. முதல் இரு இடத்தில் இங்கிலாந்தின் ஷிவர் (772), இலங்கையின் சமாரி (768) உள்ளனர்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி, ஒரு இடம் முன்னேறி, 4வது இடம் பெற்றார். முதல் மூன்று இடத்தில் இங்கிலாந்தின் சோபி, ஆஸ்திரேலியாவின் ஷட், இங்கிலாந்தின் கேட் கிராஸ் உள்ளனர்.
'ஆல் ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் தீப்தி, 6 வது இடத்தில் உள்ளார். 4 இடம் முந்திய பூஜா, 18வதாக உள்ளார்.