/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நியூசிலாந்து ஆறுதல் வெற்றி: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்நியூசிலாந்து ஆறுதல் வெற்றி: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
நியூசிலாந்து ஆறுதல் வெற்றி: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
நியூசிலாந்து ஆறுதல் வெற்றி: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
நியூசிலாந்து ஆறுதல் வெற்றி: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
ADDED : ஜூன் 17, 2024 11:59 PM

தரவ்பா: பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக அசத்திய நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட்டில் (தரவ்பா) நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ஏற்கனவே இரு அணிகளும் 'சூப்பர்-8' வாய்ப்பை இழந்தன. மழையால் போட்டி தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பப்புவா நியூ கினியா அணிக்கு டோனி உரா (1), கேப்டன் அசாத் வாலா (6) ஏமாற்றினர். சார்லஸ் அமினி (17), நார்மன் வனுவா (14), சேசே பாவ் (12) ஆறுதல் தந்தனர். சாத் சோபர் (1), கிப்லின் டோரிகா (0), ஹிரி (7), காபுவா மோரியா (0), நாவோ (3) சோபிக்கவில்லை. பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவரில் 78 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. செமோ கமியா (1) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் பெர்குசன் 3, சவுத்தீ, பவுல்ட், இஷ் சோதி தலா 2, சான்ட்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு ஆலன் (0), ரச்சின் (6) ஏமாற்றினர். கான்வே (35 ரன், 3 சிக்சர்) நம்பிக்கை தந்தார். பின் இணைந்த கேப்டன் வில்லியம்சன் (18*), டேரில் மிட்செல் (19*) ஜோடி கைகொடுத்தது. நியூசிலாந்து அணி 12.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 79 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
பவுல்ட் 'குட்-பை'
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் பவுல்ட், நேற்று தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்றார்.