/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/மலேசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்மலேசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
மலேசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
மலேசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
மலேசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
ADDED : மே 22, 2025 07:10 PM

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன் 14-21, 16-21 என பிரான்சின் கிறிஸ்டே போபோவிடம் வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.