Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சிந்து, மாளவிகா தோல்வி: மலேசிய பாட்மின்டனில்

சிந்து, மாளவிகா தோல்வி: மலேசிய பாட்மின்டனில்

சிந்து, மாளவிகா தோல்வி: மலேசிய பாட்மின்டனில்

சிந்து, மாளவிகா தோல்வி: மலேசிய பாட்மின்டனில்

Latest Tamil News
கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, மாளவிகா தோல்வியடைந்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கடந்த ஆண்டு பைனலுக்கு முன்னேறிய இந்தியாவின் சிந்து, வியட்நாமின் துய் லின் நுயென் மோதினர். இதில் ஏமாற்றிய சிந்து 11-21, 21-14, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 9-21, 8-21 என இந்தோனேஷியாவின் புத்ரி வர்தானியிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் உன்னதி ஹூடா 12-21, 20-22 என சீனதைபேயின் ஹசியாங் டி லின்னிடம் வீழ்ந்தார். இந்தியாவின் மாளவிகா 21-19, 18-21, 8-21 என சீனதைபேயின் பின்-சியான் சியுவிடம் தோல்வியடைந்தார்.

பிரனாய் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், ஜப்பானின் கென்டா நிஷிமோடோ மோதினர். இதில் பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என சீனாவின் லுா குவாங் சூவை வென்றார்.

இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன் 21-13, 21-14 என சீனதைபேயின் டியன் சென் சோவை வீழ்த்தினார்.

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 20-22, 21-10, 21-8 என கனடாவின் பிரையன் யங்கை தோற்கடித்தார். இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 15-21, 17-21 என சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் தேயிடம் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-18, 15-21, 21-14 என இந்தோனேஷியாவின் அத்னன், சாரி ஜமில் ஜோடியை வீழ்த்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us