/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: காலிறுதியில் சங்கர் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தி அபாரம்பாட்மின்டன்: காலிறுதியில் சங்கர் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தி அபாரம்
பாட்மின்டன்: காலிறுதியில் சங்கர் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தி அபாரம்
பாட்மின்டன்: காலிறுதியில் சங்கர் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தி அபாரம்
பாட்மின்டன்: காலிறுதியில் சங்கர் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தி அபாரம்
ADDED : மார் 21, 2025 11:10 PM

பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 'நம்பர்-2' வீரர் ஆன்டன்சனை வீழ்த்தினார் சங்கர் முத்துசாமி.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 64வது இடத்திலுள்ள இந்தியாவின் சங்கர் முத்துசாமி, உலகின் 'நம்பர்-2' வீரர், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனை சந்தித்தார்.
முதல் செட் 17-17 என சமநிலையில் இருந்த போதும், கடைசியில் சங்கர் 19-21 என இழந்தார். இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற சங்கர் 18-9 என முந்தினார். பின் 21-12 என செட்டை கைப்பற்றினார். மூன்றாவது, கடைசி செட் துவக்கத்தில் 3-3 என சமனில் இருந்தது. அடுத்து துடிப்பாக செயல்பட்ட சங்கர் 21-5 என எளிதாக வசப்படுத்தினார்.
முடிவில் சங்கர் 19-21, 21-12, 21-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் 31வது இடத்திலுள்ள பிரான்சின் கிறிஸ்டோ போபோவை சந்திக்க உள்ளார்.
பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, ஜெர்மனியின் ஜெலின், அமெலி ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-12, 21-8 என எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.