Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: சங்கர் ஏமாற்றம்

பாட்மின்டன்: சங்கர் ஏமாற்றம்

பாட்மின்டன்: சங்கர் ஏமாற்றம்

பாட்மின்டன்: சங்கர் ஏமாற்றம்

ADDED : மார் 22, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
பசல்: சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி ('நம்பர்-64'), 30 வது இடத்திலுள்ள பிரான்சின் கிறிஸ்டோ போபோவை சந்தித்தார்.

முதல் செட்டை சங்கர் 10-21 என இழந்தார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் சங்கர், 14-21 என ஏமாற்றினார். முடிவில் சங்கர் 10-21, 14-21 என நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, சீனாவின் நிங் டான், ஷெங் ஷு லியு ஜோடியிடம் 21-15, 15-21, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us