Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ஸ்ரீகாந்த், சதிஷ் குமார் அபாரம் * சுவிட்சர்லாந்து பாட்மின்டனில்...

ஸ்ரீகாந்த், சதிஷ் குமார் அபாரம் * சுவிட்சர்லாந்து பாட்மின்டனில்...

ஸ்ரீகாந்த், சதிஷ் குமார் அபாரம் * சுவிட்சர்லாந்து பாட்மின்டனில்...

ஸ்ரீகாந்த், சதிஷ் குமார் அபாரம் * சுவிட்சர்லாந்து பாட்மின்டனில்...

ADDED : மார் 19, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சதிஷ் குமார் வெற்றி பெற்றனர்.

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் மோதினர். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி கேம்களை வசப்படுத்த, ஸ்கோர் 20-20 என இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து அசத்திய ஸ்ரீகாந்த் 23-21 என முதல் செட்டை கைப்பற்றினார்.

அடுத்த செட்டில் 15-18 என பின்தங்கிய ஸ்ரீகாந்த், பின் 23-21 என அசத்தினார். முடிவில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சங்கர் முத்துச்சாமி, டென்மார்க்கின் ஜோஹன்னெசனை சந்தித்தார். இதில் சங்கர் முத்துச்சாமி 21-5, 21-16 என எளிதாக வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஜப்பானின் நிஷிமோட்டோவுடன் மோதினர். முதல் செட்டை 15-21 என இழந்த ஆயுஷ், அடுத்த செட்டையும் 19-21 என கைவிட்டார். முடிவில் ஆயுஷ் 15-21, 19-21 என்ற செட்டில் தோல்வியடைந்தார்.

அனுபமா வெற்றி

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா, கனடாவின் மிட்செல்லி லீயை சந்தித்தார். இதில் மாளவிகா 22-20, 14-21, 19-21 என தோல்வியடைந்தார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக வீராங்கனை அன்மோல் கார்ப் மோதினர். இதில் அனுபமா 21-14, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் இஷாராணி, ஆகர்ஷி பலப்பரீட்சை நடத்தினர். இதில் இஷாராணி, 18-21, 21-17, 22-20 என போராடி வென்றார். இந்தியாவின் ரக்சித்தா ஸ்ரீ, 11-21, 17-21 என்ற கணக்கில் டென்மார்க்கின் கிறிஸ்டோபர்செனிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர், நெதர்லாந்தின் கெல்லி வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us