
கட்டம் கட்டி கலக்குறோம் : சிம்பு வெளியிட்ட புதுப்பட அப்டேட்
இதற்கிடையே ‛ஓ மை கடவுளே" படத்தின் மூலம் பிரபலமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் நடிப்பதாக எக்ஸ் தளத்தில் சிம்பு அறிவித்துள்ளார். அதன் உடன் கட்டம் கட்டி கலக்குறோம்... வின்டேஜ் எஸ்டிஆர் மூட் என குறிப்பிட்டு தனது பாதி முகம் தெரியும் அளவுக்கு கை விரலில் கட்டம் கட்டி இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இரு தினங்களாக எக்ஸ் தளத்தில் சிம்பு, ‛‛Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT!!! என்றும், டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூடில் நாளைக்கு சார்ப்பா மாலை 6.06 மணிக்கு வரேன்"" என குறிப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‛டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!