
பாக்கியலெட்சுமி சீரியலுக்கு இனி இவர் தான் ஹீரோ!
நடிகர் ரஞ்சித்தும் பழனிச்சாமி என்கிற கேரக்டரில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். கோபி, ராதிகாவுடன் செட்டிலாகிவிட்ட நிலையில், பாக்கியலெட்சுமிக்கு ஜோடியாக பழனிச்சாமியாக ரஞ்சித் வந்துள்ளாரா? அப்படியெனில் இனி சீரியலில் சதீஷின் கதி என்ன? என்று ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள சதீஷ், "ஹீரோ ரஞ்சித் சார் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். புது ஹீரோ ரஞ்சித்துக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். இனி கோபியின் கேரக்டர் மிகவும் குறைவாகவே இருக்கும். மூன்று வருடம் ஆகிவிட்டது. 800 எபிசோடுகள் வந்துவிட்டது. இனி நான் கொஞ்சம் ஓய்வெடுக்க போகிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
கோபியின் கேரக்டர் பாக்கியலெட்சுமி தொடரின் வெற்றிக்கு பல வகையிலும் பாசிட்டாவாக இருந்தது. தற்போது கோபி கேரக்டர் குறைக்கப்படும் என்ற தகவல் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!