
இரண்டு விருதுகளை தட்டித்தூக்கிய பாக்கியலெட்சுமி சீரியல்!
ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் டிவி என பல முன்னணியில் இருக்கும் டிவி தொடர்களில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகள் வாரியாக விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதில், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடருக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. பாக்கியலெட்சுமி தொடரின் கதாநாயகி சுஜித்ரா சிறந்த அம்மா கதாபாத்திரத்திற்கான விருதையும், மற்றொரு நாயகியான ரேஷ்மா பசுபுலேட்டி சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றுள்ளனர். பாக்கியலெட்சுமி தொடர் ஏற்கனவே விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ள நிலையில், அந்த லிஸ்ட்டில் தற்போது மேலும் இரண்டு விருதுகள் சேர்ந்துள்ளன. இதனையடுத்து நடிகைகள் சுஜித்ராவுக்கும், ரேஷ்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!