
கயல் தொடரின் புதிய சாதனை! 6 மொழிகளில் ரீமேக்
அந்த வகையில் "கயல்" தொடர் ஒரு நடுத்தர குடும்பத்து பெண் வாழ்வில் பல பிரச்னைகளை சந்தித்து எதிர்நீச்சல் போடும் கதையை சொல்கிறது. இந்த தொடர் ரிலீஸான நாள் முதல் இன்று வரை டிஆர்பியில் டாப்பில் இடம் பிடித்து வருகிறது. "கயல்" தொடர் ஏற்கனவே இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே தெலுங்கில் "சாதனா", கன்னடத்தில் "ராதிகா", பெங்காளியில் "மேகே தாக்கா தாரா", மராத்தியில் "மஜ்ஜி மானஷா", ஆகிய பெயர்களில் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்போது மலையாளத்திலும் "பாவனா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான ப்ரோமோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரே காலக்கட்டத்தில் 6 மொழிகளில் ஒளிபரப்பாகும் ஒரே தொடர் என்ற சாதனையை "கயல்" தொடர் படைத்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!