புதுச்சேரி : வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கோட்டைமேடு சந்திப்பில் தனியார் பார் அருகில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் பொது மக்களை ஆபாசமாக திட்டி, அவர்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், கோட்டக்குப்பம், பழைய பட்டினப்பாதை பகுதியைச் சேர்ந்த சலீம், 35, என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.