/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : செப் 07, 2025 07:27 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் 21ம் ஆண்டு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.
துவக்க நிகழ்ச்சியாக, தேசியக்கொடி ஏந்தி மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் ஏற்றுக் கொண்டார். பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி மற்றும் ஆர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆதித்யாவின் கலாசார எழுச்சியை சித்தரிக்கும் வகையில் வெண்ணிற சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. ஆதித்யா ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு உடற்கல்வித் துறை இயக்குநர், மாணவர்கள் சாதனை குறித்த ஆண்டு அறிக்கை வாசித்தார்.
விழாவில், யோகா, கராத்தே மற்றும் தடக ளப் போட்டிகளில் பங்குபெற்று சாகச நிகழ்ச்சிகளைச் மாணவர்கள் செய்து காண்பித்தனர். 100 மாணவர்கள் பங்குபெற்ற யோகா நிகழ்ச்சி, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தடகளம், 50 மீ., 100 மீ., 200 மீ., 600 மீ., 800 மீ., ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, சதுரங்கம், கையூந்துப் பந்து, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆதித்யா பள்ளி நிறுவனர்ஆனந்தன் சுழற்கோப்பையினை வழங்கி, வாழ்த்தினார்.பள்ளி முதல்வர், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.