Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹெல்மெட் கட்டாயம்னு வந்துட்டீங்க.... சாமானியன் குரல்

ஹெல்மெட் கட்டாயம்னு வந்துட்டீங்க.... சாமானியன் குரல்

ஹெல்மெட் கட்டாயம்னு வந்துட்டீங்க.... சாமானியன் குரல்

ஹெல்மெட் கட்டாயம்னு வந்துட்டீங்க.... சாமானியன் குரல்

ADDED : மார் 22, 2025 09:47 PM


Google News
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என, வலியுறுத்துவது நல்லது தான். ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களுக்கு பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்ற போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுகள்.

ஹெல்மெட் விஷயத்தில் காட்டும் அக்கரையை சாலையோர ஆக்கிரமிப்பு விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.

புதுச்சேரி முழுதும் சாலையோரம் வண்டியை கண்ட மேனிக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் ஏன் ஆர்வம் காட்ட வில்லை. முக்கிய சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தி லோடிங் அன்லோடிங் செய்கிறார்கள்.

சென்டர் மீடியன்கள் 10 அடிக்கு ஒரு இடைவெளி விட்டு குறுக்கால் புகுந்து வருபவர்களால் விபத்து நடக்கிறது. லாரி, பஸ், டெம்போக்களில் டேஞ்சர் (சிவப்பு விளக்கு) எரிவதே கிடையாது. இந்த வாகனங்கள் திடீரென நிறுத்தும்போது பின்னால வரும் வாகனம் மோதி விடுகிறது.

பை பாசை எருமை மாடுகள் கட்டும் கூடமா மாத்திட்டாங்க. கடுமையான போக்குவரத்து நெரிசல் சாலைகளில், ஊர்ந்து செல்ல வேண்டிய சூழலில் எப்படி ஹெல்மெட் போடுவது.

வார இறுதி நாட்களில் பீக் ஹவர்சில் போக்குவரத்து போலீசார் ரோந்து செல்வது இல்லை.

புதிய டிராபிக் சிக்னல்களுக்காக தோண்டிய அரை அடி சிறு பள்ளங்கள் மூடப்படாததால், வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து எழுந்து இடிப்பு வலி வந்தது தான் மிச்சம்.

சாரம் பகுதியில் ஒரு கும்பல் சாலை போடுவதும், பின்னாலே ஒரு கும்பல் சாலை தோண்டி வருகிறது.

கோரிமேடு சாலை பெட்ரோல் பங்க் அருகில் துவங்கிய புதிய துணிக் கடைக்கு பார்க்கிங் நடுரோடு வரை உள்ளது.

புதுச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் அனைத்து கடைகளும் சாலையை பார்க்கிங் இடமாக மாற்றி விடுகின்றனர்.

குறுகிய சாலை, நெரிசல் மிக்க சாலைகளில் கூட சில புள்ளிங்கோ ஓவர் ஸ்பீடுல செல்றாங்க. இதையெல்லாம் சரிசெய்யுங்கள். அத விட்டுபுட்டு ஹெல்மெட் கட்டாயம், சீட்பெல்ட் கட்டாயம் என வந்துட்டீங்க....





      Our Apps Available On




      Dinamalar

      Follow us