/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோடை காலத்தில் பரவும் நோய்கள் சுகாதாரத்துறை எச்சரிக்கை கோடை காலத்தில் பரவும் நோய்கள் சுகாதாரத்துறை எச்சரிக்கை
கோடை காலத்தில் பரவும் நோய்கள் சுகாதாரத்துறை எச்சரிக்கை
கோடை காலத்தில் பரவும் நோய்கள் சுகாதாரத்துறை எச்சரிக்கை
கோடை காலத்தில் பரவும் நோய்கள் சுகாதாரத்துறை எச்சரிக்கை
ADDED : மார் 22, 2025 09:48 PM
கோடை காலத்தில் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் தற்போது வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது.இதனால், கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன.
அதிக வெப்பத்தினால் தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், வெப்ப சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதனால் உறுப்பு செயலிழப்பு, சுய நினைவு குறைவு, இறப்பு கூட ஏற்படலாம். வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்க முடியும்.
வயிற்றுப்போக்கு, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை ஏற்படாமல் இருக்க சரியாக சமைக்கப்படாத இறைச்சி, அசுத்தமான தண்ணீர், திறந்த வெளியில் வழங்கப்படும் உணவை மக்கள் தவிர்க்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகளை நன்றாக கழுவி உபயோகப்படுத்த வேண்டும். கண் புண்ணை, தவிர்க்க சன் கிளாஸ், கண்களை தொடுவதை தவிர்த்தல், முறையான சிகிச்சை எடுத்தல் போன்ற கண் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, புளு போன்ற காய்ச்சல் மற்றும் பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்கள் ஏற்பட அதிகவாய்ப்பு உள்ளன. அவை பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல் வேண்டும்.
வெயிலால் ஏற்படும் நோய்களை தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி சிகிச்சை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.