/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 12 போன்கள் ஒப்படைப்பு மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 12 போன்கள் ஒப்படைப்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 12 போன்கள் ஒப்படைப்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 12 போன்கள் ஒப்படைப்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 12 போன்கள் ஒப்படைப்பு
ADDED : மார் 22, 2025 09:31 PM

புதுச்சேரி : சைபர் கிரைம் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பொது மக்கள் தவறவிட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 12 மொபைல் போன்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி சைபர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதில், 35க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, சைபர் கிரைம் தொடர்பாக பல்வேறு புகார்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பொது மக்கள் தவறவிட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீலான 12 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்ந்து, சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.