/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜ் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு காமராஜ் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
காமராஜ் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
காமராஜ் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
காமராஜ் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
ADDED : மே 27, 2025 07:23 AM

புதுச்சேரி; காமராஜ் நகரில் வைத்திலிங்கம் எம்.பி., அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
காமராஜ் நகர் தொகுதி கவிக்குயில் நகர், முத்தரங்க செட்டிநகர் சுந்தரமூர்த்தி நகர் பகுதிகளில் உள்ள கழிவு வாய்க்கால் வீடுகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடைப்பட்டு கிடக்கின்றது. இதனால் மழைக்காலங்களில் இந்த மூன்று நகர்களிலும் வெள்ளம் புகுந்து விடுகின்றது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் கழிவு நீர்வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் புகும் அபாயம் உள்ளது.
இது குறித்து அத்தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ் வைத்திலிங்கம் எம்.பி.,யிடம் முறையிட்டார். அதன் பேரில் நேற்று வைத்திலிங்கம் எம்.பி., அரசு அதிகாரிகளிடம் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். இந்த மூன்று நகர்களில் உள்ள பொதுபிரச்னைகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து இருவரும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அவற்றை சரி செய்வதாக உறுதியளித்தனர்.
வட்டார காங்., தலைவர் செல்வம், நிர்வாகிகள் கோதண்டராமன், சுரேஷ், சுப்பிரமணியன்,செல்லபெருமாள், ராஜேந்திரன், புகழேந்தி கங்காதரன், ராஜ் குமார், கதிர், ராணி, லட்சுமி, மீனா உடனிருந்தனர்.