/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : மே 27, 2025 07:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
முகாமிற்கு, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., மோகன்குமார் பங்கேற்று மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வருகின்றன. அதில், கருவில் உள்ள குழந்தை ஆண், பெண் என்று கூறுவதற்கு, பிறந்த குழந்தையை அறையில் இருந்து வெளியே கொண்டுவர ஊழியர்கள் வலுகட்டாயமாக பணம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
இந்த குற்றச்சாட்டு, கவர்னர், முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளதால், நமக்கு சட்ட விரோதமான முறையில் வரும் பணம் வேண்டாம். மருத்துவமனையின் ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்து 3 இன்ஸ்பெக்டர்கள், 3 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான சாட்சிகள் கிடைத்த உடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முகாமில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியோ உள்ளிட்ட ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.