/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை : முதல்வர் துவக்கி வைப்பு துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை : முதல்வர் துவக்கி வைப்பு
துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை : முதல்வர் துவக்கி வைப்பு
துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை : முதல்வர் துவக்கி வைப்பு
துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி பட்டறை : முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மே 27, 2025 07:23 AM

புதுச்சேரி: மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தின் கீழ், உழவர்கரை நகராட்சி மற்றும் ஜென் ரோபோடிக்ஸ் நிறுவனம் சார்பில் சாக்கடை மற்றும் கழிவுநீர்களை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதைத் தடுப்பது குறித்த துப்புரவு பணியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது.
பயிற்சி பட்டறையை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து, கழிவுகள் மற்றும் பாதாள சாக்கடையை சுத்தும் செய்யும் ரோபோடிக் துப்புரவு இயந்திரத்தை இயக்கி வைத்தார்.
இதில், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், தேசிய துப்புரவு பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் பிரபாத் குமார் சிங், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், ஜென் ரொபோடிக்ஸ் நிறுவனர் ரஷீத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், கழிவுநீர் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வதில் ஏற்படும் தொழில்சார் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ரோபோடிக் இயந்திரம் மூலம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு மற்றும் கருவிகளை (கையுறைகள், முகக் கவசம், விஷவாயு கசிவு கண்டுபிடிப்பான் போன்றவைகளை) பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.