/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரியாணி கடையில் 'தீ'; உரிமையாளர் படுகாயம் பிரியாணி கடையில் 'தீ'; உரிமையாளர் படுகாயம்
பிரியாணி கடையில் 'தீ'; உரிமையாளர் படுகாயம்
பிரியாணி கடையில் 'தீ'; உரிமையாளர் படுகாயம்
பிரியாணி கடையில் 'தீ'; உரிமையாளர் படுகாயம்
ADDED : மே 27, 2025 07:22 AM

புதுச்சேரி; பிரியாணி கடையில் சிலிண்டரில் காஸ் கசிவு காரணமாக தீ பிடித்ததில் உரிமையாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுச்சேரி பாரதி வீதி- சின்ன வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் அப்பு (எ) கிளாமன், 45. இவர் தனது வீட்டின் எதிரே ஹலோ பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 2:30 மணி அளவில், கடையில் இருந்த சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு, தீ பிடித்து எரிந்தது.
இதில், கிளாமனுக்கு முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து, கிளாமனை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கிளாமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.