/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த துப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை முதல்வர் ரங்கசாமி தகவல் இறந்த துப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை முதல்வர் ரங்கசாமி தகவல்
இறந்த துப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை முதல்வர் ரங்கசாமி தகவல்
இறந்த துப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை முதல்வர் ரங்கசாமி தகவல்
இறந்த துப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : மே 27, 2025 07:23 AM
புதுச்சேரி : நகராட்சியில் துப்புரவு பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
துப்புரவு பணியாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் துப்புரவு பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். அதனை துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும்போது, அதனை சுத்தம் செய்யும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.
துப்புரவு பணியை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருகின்றன. அதன் அடிப்படையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஜென் ரோபோடிக் இயந்திரம் மூலம் கழிவுநீர் அகற்றுதல், பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்தல் பணிகள் துவங்கப்படஉள்ளது.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியின்போது இறந் தால், அவர்களுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டியது அரசின் கடமை.
அதன்படி, புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் ஒத்துழைப்பு இருந்ததால், அரசின் ஒவ்வொரு திட்டமும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார்.