/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.எல்.சி.,யில் திருடிய இருவர் கைதுஎன்.எல்.சி.,யில் திருடிய இருவர் கைது
என்.எல்.சி.,யில் திருடிய இருவர் கைது
என்.எல்.சி.,யில் திருடிய இருவர் கைது
என்.எல்.சி.,யில் திருடிய இருவர் கைது
ADDED : பிப் 06, 2024 06:05 AM
மந்தாரக்குப்பம், : நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரி பேட்டரி திருடிய இருவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியை சேர்ந்த அருள்மணி, 38, மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், 35, என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.