பீஹார், ராஜஸ்தான் பா.ஜ., மாநில தலைவர்கள் நியமனம்
பீஹார், ராஜஸ்தான் பா.ஜ., மாநில தலைவர்கள் நியமனம்
பீஹார், ராஜஸ்தான் பா.ஜ., மாநில தலைவர்கள் நியமனம்
UPDATED : ஜூலை 26, 2024 02:46 AM
ADDED : ஜூலை 26, 2024 01:55 AM

புதுடில்லி: பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய பா.ஜ., தலைவர்களை நியமிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய தலைவர் ஜே.பி., நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீஹார் மாநில பா.ஜ., தலைவராக இருந்த சாம்ராட் சவுத்ரி விடுவிக்கப்பட்டு, திலிப் ஜெய்ஸ்வால் புதிய மாநில தலைவராகவும், ராஜஸ்தான் மாநில தலைவராக இருந்த சி.பி.ஜோஷி விடுவிக்கப்பட்டு, மதன் ரத்தோர் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டனர். மேலும் தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு கட்சி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.