/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல் பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
ADDED : ஜூன் 17, 2025 01:04 AM
அரியாங்குப்பம் : பெட்ரோல் பங்கில், கன் எடுத்து, பெட்ரோல் போட்டதை கேட்ட கேஷியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை தேடிவருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை என்கிற மஞ்சினி, 38, இவர் தவளக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்கில், கேஷியராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், பைக்கில் வந்த இருவர், பங்கில் இருந்த பெட்ரோல் போடும் கன் எடுத்து, அவர்கள் வந்த பைக்கில் பெட்ரோல் போட்டனர். அங்கிருந்த கேஷியர் துரை, எங்களை கேட்க்காமல் எப்படி பெட்ரோல் போடலாம் என தட்டி கேட்டார்.
அதில், ஆத்திரமடைந்த, இரண்டு பேரும் சேர்ந்து, கேஷியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, அவர் கொடுத்து புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், தவளக்குப்பம் அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சரண், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நெல்வின் என்பது தெரியவந்தது. இவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.