/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு வலியுறுத்தல் பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 17, 2025 01:04 AM
பதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாநில மக்களுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனஅ.தி.மு.க., உரிமை மீட்பு குழு புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவர்விடுத்துள்ள அறிக்கை:
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அந்த மாநிலம் கல்வியில் எந்த அளவு முன்னேறுகிறது என்பதை பொறுத்து அமையும்.அதுபோல புதுச்சேரி மாநிலம் கல்வியில் வேகமாக வளர்ந்து வரும்சூழ்நிலையில், புதுச்சேரி வருகை தந்துள்ள துணை ஜனாதிபதியை,முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளால் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வெளி மாநில மாணவர்களை விட , புதுச்சேரி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பயின்று வருகின்றனர்.முதல்வர், துணை ஜனாதிபதியிடம் அளித்துள்ள மனுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து,புதுச்சேரி மாநில மக்களின் உரிமைக்காக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க துணை ஜனாதிபதிமுன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.