Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உபகரணங்கள்: கவர்னர், முதல்வர் பெருமிதம்

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உபகரணங்கள்: கவர்னர், முதல்வர் பெருமிதம்

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உபகரணங்கள்: கவர்னர், முதல்வர் பெருமிதம்

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உபகரணங்கள்: கவர்னர், முதல்வர் பெருமிதம்

ADDED : ஜூன் 17, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் உள்ளது என கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார்.

புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில், 20 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள் 1.5 டெஸ்லா எம். ஆர். ஐ. ஸ்கேன், 128 ஸ்லைஸ் 'சிடி ஸ்கேன்', டிஜிட்டல் மேமோகிராம், மாலிக்குலர் டயாக்னொஸ்டிக் லேப் ஆகியவற்றை கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

அப்பொழுது கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ உபகரண வசதிகள் போன்றே அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவ உபகரண வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு இணையாக புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது என கூறினார்.

அவரைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைகிறது. இங்கு இதய அறுவை சிகிச்சையும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இதய அறுவை சிகிச்சை அதிக அளவில் செய்வதற்கு கூடுதலாக இன்னொரு தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யலாம் என்ற ஆலோசனையும் உள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், மருத்துவ செயலர் ஜெயந்த்குமார் ரே, சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமி முனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம நாதன், குறைதீர் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us