/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்று நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து இன்று நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து
இன்று நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து
இன்று நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து
இன்று நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து
ADDED : ஜூன் 14, 2025 01:20 AM
புதுச்சேரி : காவல் நிலையங்களில் இன்று நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது.
அதன்படி, காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை காவல் நிலையங்களில் உயர் அதிகாரிகள் பங்கேற்று, 'மக்கள் மன்றம்' நிகழ்ச்சியின் மூலம் நேரடியாக பொதுமக்களை சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து, நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 14ம் தேதி நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், 'புதுச்சேரி காவல் நிலையங்களில் இன்று 14ம் தேதி நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி சட்டம், ஒழுங்கு ஏற்பாடுகள், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. அடுத்த வாரம் முதல் வழக்கம்போல், மக்கள் மன்றம் நடைபெறும்' என்றார்.