/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதவியாளர் பணிக்கு இரண்டாம் நிலை தேர்வு உதவியாளர் பணிக்கு இரண்டாம் நிலை தேர்வு
உதவியாளர் பணிக்கு இரண்டாம் நிலை தேர்வு
உதவியாளர் பணிக்கு இரண்டாம் நிலை தேர்வு
உதவியாளர் பணிக்கு இரண்டாம் நிலை தேர்வு
ADDED : ஜூன் 14, 2025 01:19 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசின் உதவியாளர் பணிக்கான, இரண்டாம் நிலை தேர்வு வரும் 22ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான முதல் நிலை தேர்வை, கடந்த மாதம் 27ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி பகுதிகளில் 84 மையங்களில் 22 ஆயிரத்து 860 பேர் எழுதினர்.
இந்த தேர்வுக்கான ஆன்சர் கீ 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை https://recruitment.py.gov.in இணைதளத்தில் கோரப்பட்டது. அனைத்து பரிசீலனைகளும் முடிந்து உதவியாளர் பணியில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 860 பேரில், 10 ஆயிரத்து 766 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு வரும் 22ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
தேர்வர்கள், அனுமதி சீட்டை, https:recritment.py.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தகவலை சார்பு செயலர் (தேர்வு பிரிவு) ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.