/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை விமான நிலையத்தில் ஐ.ஜி., ஆய்வு துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை விமான நிலையத்தில் ஐ.ஜி., ஆய்வு
துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை விமான நிலையத்தில் ஐ.ஜி., ஆய்வு
துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை விமான நிலையத்தில் ஐ.ஜி., ஆய்வு
துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை விமான நிலையத்தில் ஐ.ஜி., ஆய்வு
ADDED : ஜூன் 14, 2025 01:18 AM

புதுச்சேரி : துணை ஜனாதிபதி வருகையையொட்டி, புதுச்சேரி விமான நிலையத்தில் ெஹலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை 15ம் தேதி புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து, 16ம் தேதி ஜிப்மரிலும், 17ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அவரது வருகையையொட்டி புதுச்சேரி முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடக்கும் அரங்குகள் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி., அஜித்குமார் சிங்களா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விமான நிலையத்தில் 20 சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் ெஹலிகாப்டர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, டி.ஐ.ஜி., சத்தியசுத்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் ரகுநாயகம், வீரவல்லபன், ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் இனியன், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
பின், ஜிப்மர், புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
துணை ஜனாதிபதி வரும் வழிகள், தங்குமிடத்தில் உள்ள வசதி குறித்தும் பார்வையிட்டனர்.
இன்று 14ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் புதுச்சேரி போலீசாருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.