/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாழ்வாதார தொகையை உயர்த்தக்கோரி மகளிர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு வாழ்வாதார தொகையை உயர்த்தக்கோரி மகளிர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு
வாழ்வாதார தொகையை உயர்த்தக்கோரி மகளிர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு
வாழ்வாதார தொகையை உயர்த்தக்கோரி மகளிர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு
வாழ்வாதார தொகையை உயர்த்தக்கோரி மகளிர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு
ADDED : ஜூன் 14, 2025 01:20 AM

புதுச்சேரி : மத்திய அரசு திட்டங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கவர்னரிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி ராஜ் நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனிடம் அளித்த மனு:
கடந்த 2015ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் சுய உதவிக் குழுக்கள் துவங்கி பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த மகளிர் கூட்டமைப்பு மூலம் கூட்டமைப்பின் ஊழியர்களாக களப் பணியாளர்கள், சமூக வல்லுநர்களை நியமித்து டி.ஆர்.டி.ஏ., மூலம் கவுரவ ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில ஊழியர்களின் செயல்பாடுகளால் இத்திட்டம் அழியக் கூடிய நிலையில் உள்ளது. குறிப்பாக தீன் தயாளர் அந்தியோதயா இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்டங்கள் கேள்வி குறியாகியுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தற்போது 117 டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் 261 சமூக வல்லுநர்கள், கணக்காளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
எங்களை கண்காணிக்க வட்டார அளவிலும், மாநில அளவிலும் கண்காணிப்பு உள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத ஊழியர்கள், அதிகாரிகள் இத்திட்டத்தை சீர்குலைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியே வாழ்வாதார தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.