/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூட்டணி தொடர வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரிடம் பொங்கிய ரங்கசாமி கூட்டணி தொடர வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரிடம் பொங்கிய ரங்கசாமி
கூட்டணி தொடர வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரிடம் பொங்கிய ரங்கசாமி
கூட்டணி தொடர வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரிடம் பொங்கிய ரங்கசாமி
கூட்டணி தொடர வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரிடம் பொங்கிய ரங்கசாமி
ADDED : செப் 21, 2025 06:18 AM
புதுச்சேரியில் நடந்த சிந்தனை அமர்வு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ்ஜி, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அர்ஜுன் ராம் மெக்வல், புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
கூட்டம் முடிந்து ஆரோவில் பாரத் நிவாஸில் தங்கியிருந்த, தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை, முதல்வர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர், புதுச்சேரியில் எனது தலைமையிலான அரசை, பா.ஜ.,வில் உள்ள சிலர் விமர்சித்து வருகின்றனர்.
என்.ஆர்.காங்.,போட்டியிட்ட தொகுதிகளில் இலவசமாக பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மனநிலையை உருவாக்கி வருகின்றனர்.
தற்போது அமைச்சர் ஜான்குமாரின் நண்பராக இருக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து இறந்ததாக கூறப்படுபவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று நிவாரணத் தொகை வழங்கி, அரசை கண்டித்து பேசி உள்ளார்.
கவர்னர் மாளிகையில் உள்ள அதிகாரி, ரேஷன் அரிசி வழங்குவதற்கான நான் அனுப்பிய கோப்புகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தி எனக்கும், கவர்னருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்திவிட்டார்.
மேலும் கவர்னரின் துணையுடன் சில எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக அரசு துறைகளில் தலையிட்டு தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களை அடக்காவிட்டால் கூட்டணி தொடர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என தனது மனக்குமறலை கொட்டி தீர்த்தார்.
இதனைக் கேட்ட மன்சுக்் மாண்டவியா, முதல்வரை சமாதானப்படுத்தி இது குறித்து உடனடியாக டில்லிக்கு வந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும் என்றதும், விரைவில் அமித்ஷாவை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.
என்ன நடக்கப்போகிறது எனபது விரைவில் தெரியவரும் என என்.ஆர். காங்., கூறுகின்றனர்.