/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரை துாய்மை தினம் கடலோர காவல் படை சாகசம் கடற்கரை துாய்மை தினம் கடலோர காவல் படை சாகசம்
கடற்கரை துாய்மை தினம் கடலோர காவல் படை சாகசம்
கடற்கரை துாய்மை தினம் கடலோர காவல் படை சாகசம்
கடற்கரை துாய்மை தினம் கடலோர காவல் படை சாகசம்
ADDED : செப் 21, 2025 06:17 AM

சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தையொட்டி, கடற்கரையில் துாய்மை பணியை, கவர்னர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.
கடலோர காவல் படை சார்பில், கடற்கரை துாய்மை பணி, காந்தி சிலை அருகில் நேற்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், துாய்மை பணியை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சேர்ந்து கவர்னர் கடற்கரை பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல் படை புதுச்சேரி பிரிவின் இயக்குனர் தசீலா, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கடலோர காவல் படையினர், கடற்கரை பகுதியில், சாகசம் செய்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் தங்கள் மொபைல் போனில், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.