/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மோடி பிறந்த நாளை தவிர்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மோடி பிறந்த நாளை தவிர்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
மோடி பிறந்த நாளை தவிர்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
மோடி பிறந்த நாளை தவிர்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
மோடி பிறந்த நாளை தவிர்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : செப் 21, 2025 06:19 AM
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாள் விழா கடந்த 17ம் தேதி பா.ஜ., சார்பில் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில், பா.ஜ., மாநில தலைமை சார்பில், பல இடங்களில் விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் தங்கத்தேர் இழுத்து, கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதேபோன்று அமைச்சர் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஒருவரும் தங்கள் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரதமர் பிறந்த நாளை கொண்டாடினர்.
ஆனால், பா.ஜ.,வை சேர்ந்த ஒரு அமைச்சர் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் எவ்வித விழாக்களும் செய்யாமல் மவுனமாக இருந்து விட்டனர். ஐந்து மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் சுயேச்சையாக போட்டியிட தயாராகும் நபர்கள் கூட ஏதாவது ஒரு விழாக்களை வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர்.
ஆனால் மோடியின் பிறந்த நாளை கொண்டாடாமல் ஏன் பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் எதுவும் செய்யாமல் நழுவினர் என்பது புரியாமல் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை புறக்கணித்த எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கைகள் கட்சி தலைமைக்கு சிலர் புகார் அனுப்பியுள்ளனர். இதற்கு என்ன எதிர்வினை நடக்கப் போகிறது என்பது விரைவில் தெரியும் என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.