/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யார் அந்த கருப்பு ஆடு... தி.மு.க.,வில் குழப்பம் யார் அந்த கருப்பு ஆடு... தி.மு.க.,வில் குழப்பம்
யார் அந்த கருப்பு ஆடு... தி.மு.க.,வில் குழப்பம்
யார் அந்த கருப்பு ஆடு... தி.மு.க.,வில் குழப்பம்
யார் அந்த கருப்பு ஆடு... தி.மு.க.,வில் குழப்பம்
ADDED : செப் 21, 2025 06:19 AM
எந்த மக்கள் பிரச்னையும் என்றாலும் தி.மு.க., போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை. சட்டசபையிலும் அப்பிரச்னை குறித்து குரல் எழுப்புகிறது. சமீப காலமாக தி.மு.க., நடத்தும் அதே போராட்டத்தை சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு அதற்கு முன் நடத்தி விடுகின்றார்.
இப்படி தான் சட்டசபை கூட்டத் தொடரில் கூட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி புறக்கணிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ., முந்திக்கொண்டார். அவரை குண்டு கட்டமாக வெளியேற்ற சபாநாயகர் செல்வம் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் சபை காவலர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை குண்டு கட்டமாக அகற்றினர்.
போராட்டம் நடத்திய பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் சிவா, நாங்க மக்கள் பிரச்னைக்காக ஏதாவது போராட்டம் நடத்த முடிவு செய்தால் அது உடனடியாக ஆளும் கட்சிக்கு தெரிந்துவிடுகிறது.
இங்கிருக்கும் கருப்பு ஆடு, அங்கே ரகசியத்தை சொல்லிவிடுகிறது. அப்புறம் எங்களது போராட்டத்தை நீர்த்து போக செய்ய இந்த சுயேச்சை எம்.எல்.ஏ.,வை இறக்கி விடுகின்றன. இதனால் மக்களின் கவனம் அப்படியே திரும்பி விட செய்கின்றனர்' என்றார்.
இந்த கேள்விக்கு நேரு எம்.எல்.ஏ.,விடம் கேட்கப்பட, அட நீங்க வேற. நான் தான் ஆளும் கட்சிக்கு சப்போட். அப்படின்னா, என்னை தானே பேச சொல்லனும். ஆனால் என்னுடைய மைக்கை ஆப் செய்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவரை மைக்கில் பேச அனுமதிக்கின்றனர். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கள்ள கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இப்ப புரிகிறதா உண்மை' என்றார்.
அது சரி.. அந்த கருப்பு ஆடு யாராக இருக்கும் என்பதே ஹாட் டாப்பிக்காக இப்ப தி.மு.க., வில் இருக்கு....