/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜி.எஸ்.டி., வரி குறைப்பு வரவேற்று தீர்மானம் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு வரவேற்று தீர்மானம்
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு வரவேற்று தீர்மானம்
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு வரவேற்று தீர்மானம்
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு வரவேற்று தீர்மானம்
ADDED : செப் 26, 2025 04:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., வரி குறைப்பிற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர் செல்வம், பா.ஜ., ஜி.எஸ்.டி., பிரசார குழுவிடம் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜி.எஸ்.டி. 2.0 வரி குறைப்பு செய்தது. இதற்கு பிரதமருக்கு புதுச்சேரி சட்டசபையில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில ஓ.பி.சி., அணி தலைவரும், ஜி.எஸ்.டி., 2.0 பிரசார குழுவின் மாநில இணை பொறுப்பாளர் கோவேந்தன் கோபதியிடம் வழங்கினார்.
இந்த தீர்மானத்தை பா.ஜ., ஜி.எஸ்.டி., 2.0 பிரசார குழு சார்பில், பிரதமருக்கு அனுப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில துணை தலைவர் கனகராஜ், ஓ.பி.சி., அணி மாநில துணை தலைவர் துரைசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில இணை அமைப்பாளர் சார்லஸ் தங்கதுரை, ஓ.பி.சி., மாநில செயற்குழு உறுப்பினர் வேணு ஆகியோர் உடனிருந்தனர்.