/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 26, 2025 04:55 AM

புதுச்சேரி:வம்பாகீரப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தலைமை தாங்கினார். கவுரவ விருந்தினராக தொழிலாளர் துறை அரசு செயலர் ஸ்மிதா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். துணை தொழிலாளர் ஆணையர் சந்திரகுமரன் துவக்க உரையாற்றினார்.
டச் எனர்ஜி டெக்னாலஜி முதன்மை இயக்குனர் சண்முகானந்தம் சிறப்புரையாற்றினார். பட்டம் பெற்ற மாணவியருக்கு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் முதல்வர் ருக்மணி, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.