/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூரியனுக்கு வலை விரித்த தாமரை பாகூர் அரசு விழாவில் 'ருசிகரம்' சூரியனுக்கு வலை விரித்த தாமரை பாகூர் அரசு விழாவில் 'ருசிகரம்'
சூரியனுக்கு வலை விரித்த தாமரை பாகூர் அரசு விழாவில் 'ருசிகரம்'
சூரியனுக்கு வலை விரித்த தாமரை பாகூர் அரசு விழாவில் 'ருசிகரம்'
சூரியனுக்கு வலை விரித்த தாமரை பாகூர் அரசு விழாவில் 'ருசிகரம்'
ADDED : ஜூன் 22, 2025 01:55 AM
புதுச்சேரியில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தொகுதிகளில், மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்களை கட்சியில் இழுக்கும் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பாகூர் பேட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சாலை பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பா.ஜ.,வை சேர்ந்த துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், வழக்கம் போல் தனது ஸ்டைலில், சுக்லாம் பரதம் என, மந்திரம் கூறியபடி பூஜையை துவக்கினார்.
அப்போது, விழா மேடை அருகே தி.மு.க., வினர் கருப்பு, சிவப்பு துண்டு அணிந்து, அணிவகுத்து நின்றக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த அமைச்சர் சாய் சரவணன்குமார், அட சூரியன் வந்துவிட்டது, எங்கப்பா தாமரையை காணோம் என, கூறியபடி, சுற்றும் முற்றும் பார்த்து, ஒதுங்கி நின்றிருந்த பா.ஜ.,வினரை அழைத்து அருகில் நிறுத்தி வைத்துக் கொண்டு பூமி பூஜைகளை செய்து முடித்தார்.
பின்னர் அமைச்சர், தனது கட்சியினரிடம், தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் நல்லவருப்பா... திறமையானவர். அவரை விட்டுடாதிங்கப்பா... எப்படியாவது பா.ஜ.,விற்கு அழைத்து வந்துவிடுங்கப்பா என்றார். அப்போது, அங்கிருந்த தி.மு.க.,வினரில் ஒருவர், சூரியன் வந்தா தான், தாமரை மலரும்' என்று, நிலைமையை சமாளித்தார்.