/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பூட்டு பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
ADDED : செப் 03, 2025 07:13 AM
புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதியில், 15 நாட்களுக்குள் தண்ணீர் தரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 7 நாட்களில், 2 இடங்களில் பொதுமக்கள் குடிநீர் தரம் குறித்து புகார் செய்து, போராட்டம் நடத்தி உள்ளனர்.
தரமற்ற குடீநீரை அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர். சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால் தோல் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.
குடிப்பதற்கு இல்லாமல், மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அதற்கும் லாயகற்ற நிலையில் தண்ணீரின் தரம் தற்போது மாறி உள்ளது.நெல்லிதோப்பு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தரம் மிகவும் குறைந்து உள்ளது குறித்தும், புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று 1 மாதத்திற்கு முன்பு பொதுப்பணி துறைக்கு நான் கோரிக்கை மனு அளித்தேன்.ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 நாட்களுக்குள் நெல்லிதோப்பு தொகுதியில் தண்ணீர் தரத்தை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-