/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நல்லவாடில் டுனா மீன்பிடி துறைமுகம் மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் கோரிக்கை நல்லவாடில் டுனா மீன்பிடி துறைமுகம் மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் கோரிக்கை
நல்லவாடில் டுனா மீன்பிடி துறைமுகம் மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் கோரிக்கை
நல்லவாடில் டுனா மீன்பிடி துறைமுகம் மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் கோரிக்கை
நல்லவாடில் டுனா மீன்பிடி துறைமுகம் மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் கோரிக்கை
ADDED : செப் 03, 2025 07:14 AM

புதுச்சேரி : டில்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியனை சந்தித்து டுனா மீன்பிடி துறைமுகம் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை கடிதம் அளித்தார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறைகள், போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது மற்றும் நிலையற்ற சந்தை நிலைமைகள் ஆகியவற்றால் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றனர்.
மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு, மணவெளி தொகுதி நல்லவாடு, கடலோரப் பகுதியில் 'டுனா மீன்பிடி துறைமுகம்' திட்டத்தை நிறுவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் ஆழ் கடல் சூரை மீன்பிடித்தலுக்கான, அதிநவீன உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் உள்ளூர் மீன்பிடி தொழில் மேம்படுத்தப்படும்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் நல்லவாடு கடலோரப் பகுதியில் மீன் இறங்குதள மையத்திற்கான உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதனுடன், 'டுனா மீன்பிடி துறைமுகம்' திட்டத்தை நிறைவேற்றவும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பரிசீலித்து இந்த திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு கூறப் பட்டுள்ளது.
ராஜ்நாத்சிங்குடன் சந்திப்பு முன்னதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சபாநாயகர் செல்வம் சந்தித்து பேசினார். தொடர்ந்து, மத்திய தொழிலாளர் நலம் மற்றும் விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையை தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள விளையாட்டு வீரர்களின் நலன் கருதி புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்க சிறப்பு மானிய தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் முருகனை சந்தித்து பேசி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். பின், நேற்று இரவு சபாநாயகர் செல்வம் புதுச்சேரி திரும்பினார்.