/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு வழியனுப்பு விழா ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு வழியனுப்பு விழா
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு வழியனுப்பு விழா
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு வழியனுப்பு விழா
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு வழியனுப்பு விழா
ADDED : செப் 03, 2025 07:13 AM

புதுச்சேரி : பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரை, துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழி அனுப்பினர்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநராக பணியாற்றிய இளங்கோவன், புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக சிறப்புகூறு நிதியை, கடந்த 2 ஆண்டுகளில் 100 சதவீதம் செலவு செய்ய நடவடிக்கை எடுத்தார்.
வீடு கட்டும் தொகையை ரூ. 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தியது, குழந்தைகள் உள்பட அனைவருக்கும் தொடர்நோய் உதவித்தொகை வழங்கியது, இலவச வேட்டி சேலைக்கான தொகையை ரூ.500ல் இருந்து ஆயிரமாக உயர்த்தியது, ஆயிரம் ரூபாயாக இருந்த கல்வி உதவி தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியது போன்ற திட்டங்களை செயல்படுத்தினார்.
இந்நிலையில், இளங்கோவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, துறைக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டார். பணியிட மாறுதல் பெற்ற இயக்குனர் இளங்கோவனின் பணிகளை, துறையின் அதிகாரிகளும், ஊழியர்களும் பாராட்டி வழியனுப்பினர்.