ADDED : செப் 03, 2025 07:12 AM
புதுச்சேரி : தனியார் கம்பெனி செக்யூரிட்டி இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதாரப்பட்டு முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் 75, இவர் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் கம்பெனி செக்யூரிட்டி. இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பணிக்கு சென்றவர், நேற்று காலை அவரது செக்யூரிட்டி அறையில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த சக ஊழியர் பெருமாள் என்பவர் வேலாயுதம் வீட்டிற்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.