/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பெரிய மார்க்கெட் ராட்சத துாக்கு மேடை திருடர்கள், ரவுடிகளை கதிகலங்க வைத்த பிரெஞ்சியர்கள் அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பெரிய மார்க்கெட் ராட்சத துாக்கு மேடை திருடர்கள், ரவுடிகளை கதிகலங்க வைத்த பிரெஞ்சியர்கள்
அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பெரிய மார்க்கெட் ராட்சத துாக்கு மேடை திருடர்கள், ரவுடிகளை கதிகலங்க வைத்த பிரெஞ்சியர்கள்
அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பெரிய மார்க்கெட் ராட்சத துாக்கு மேடை திருடர்கள், ரவுடிகளை கதிகலங்க வைத்த பிரெஞ்சியர்கள்
அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பெரிய மார்க்கெட் ராட்சத துாக்கு மேடை திருடர்கள், ரவுடிகளை கதிகலங்க வைத்த பிரெஞ்சியர்கள்
ADDED : மார் 22, 2025 09:50 PM
புதுச்சேரியில் வீதி அழகாக இருந்தாலும், நீதி அழகாக இல்லை என்ற சொலவடை இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
பிரெஞ்சியர் ஆட்சியில் சமத்துவம் பேணப்பட்டாலும், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நீதி வழங்கப்படவில்லை. பிரெஞ்சியர்களுக்கு ஒரு நீதியும், புதுச்சேரி மக்களும் ஒரு நீதியும் கடைபிடிக்கப்பட்டன.
குறிப்பாக, இந்தியர்களுக்கு சிறிய குற்றங்களுக்கு கூட கடும் தண்டனை வழங்கப்பட்டன. சிறை தண்டனையால் திருந்த மாட்டான் என கருதிய திருடர்கள் காதை வெட்டுதல், மூக்கை வெட்டுதல், கையை துண்டித்தல், சிரச்சேதம் என கொடும் தண்டனைகள் புதுச்சேரியில் வழங்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சுக்காரர்கள் திருட்டு குற்றங்களை குறைக்க சிறை தண்டனை பலனிக்காது என்பதற்காக மரண தண்டனை விதித்தனர். இதற்கு பல உதாரணங்கள் புதுச்சேரியில் உள்ளன.
கவர்னர் பிரான்சுவா மார்த்தேன் காலத்தில் கம்பெனி பொருட்களை திருடிய குற்றத்திற்காக இரண்டு பேர் பகிரங்கமாக துாக்கலிடப்பட்டனர். அடுத்து வந்த துய்மா, டூப்ளே காலத்திலும் திருட்டு குற்றம் கொடிய குற்றமாக கருதி மரண தண்டனை தான் விதிக்கப்பட்டது. பிரெஞ்சு ஆட்சியில் ரொம்ப நாட்களாக திருடி வந்த திருடன் ஒருநாள் பிடிபட்டான். அந்த திருட்டு பொருட்களை வாங்கியவர்கள், அவன் தங்க இடம் கொடுத்தவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த காலத்தில் சிறை என்பது கிடங்கினை தான் குறிக்கும்.
நீதிமன்ற உத்தரவின்படி கடைத்தெரு முத்திரைச்சாவடியில், அதாவது இன்றைய பெரிய மார்க்கெட் பகுதியில் ஒரு ராட்சத துாக்கு மரம் நடப்பட்டது. மாலை 5:00 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த திருடன் துாக்கிலிடப்பட்டான். அவனுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கசை அடி கொடுத்தும், காதுகளை அறுத்தும் புதுச்சேரியை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
இதேபோல், மீராபள்ளி பகுதியில் ஒரு வீட்டில் திருடியவன் கையும் களவுமாக மாட்டிக்கொண்டான். அவனும் முத்திரைச்சாவடிக்கு கொண்டு வந்து துாக்கிலிடபட்டுள்ளான்.
இதேபோல் தேச துரோக குற்றத்திற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1738ல் ராணுவ படையில் சேர்ந்திருந்த ஒருவர் ஓடிவிட்டான். பிரெஞ்சியர்களுக்கு வந்ததே கோபம். 15 நாட்கள் தப்பி ஓடியவரை காவலில் வைத்திருந்த பிரெஞ்சியர்கள் அவனுக்கு கொடுக்கும் தண்டனை படையில் இருக்கும் அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.
கோட்டையின் தெற்கு பக்கத்தில் அகழி ஓரத்தில் அவனை முழங்காலிட செய்தனர்.
கைக்குட்டையால் அவனது கண்ணை கட்டி, துப்பாக்கியால் சராமரியாக சுட்டு தள்ளினர். ரவுடிகளும் பொட்டி பாம்பு போல அமைதியாகவே இருந்தனர்.
பிரெஞ்சு பாரம்பரியமிக்க புதுச்சேரி போலீஸ் துறை இன்றைக்கு வேண்டும் என்றால், யார் அடிச்சாலும் தாங்கி கொள்ளலாம். தற்காப்புக்கு கூட துப்பாக்கியை துாக்க யோசிக்கலாம்.
ஆனால் பிரெஞ்சு காலத்தில் புதுச்சேரி போலீசாரின் நடவடிக்கையெல்லாம் எல்லாமே சரவெடி தான்.
புதுச்சேரி போலீசாரின் வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால் எல்லாமே அதிரடியாகதான் இருந்திருக்கிறது. புதுச்சேரி போலீசார் இழந்த பெருமையை ஞாபகப்படுத்தி மீட்டெடுத்து கொள்வது நல்லது.