Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் அலங்கோலம் குப்பைகள், பிளாஸ்டிக் குவிந்து துர்நாற்றம்

லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் அலங்கோலம் குப்பைகள், பிளாஸ்டிக் குவிந்து துர்நாற்றம்

லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் அலங்கோலம் குப்பைகள், பிளாஸ்டிக் குவிந்து துர்நாற்றம்

லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் அலங்கோலம் குப்பைகள், பிளாஸ்டிக் குவிந்து துர்நாற்றம்

ADDED : மார் 22, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
திறமையான மாணவர்களை கண்டறிய உருவாக்கப்பட்ட லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் சங்கங்களின் பொறுப்பு இன்மையால் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக கிடக்கிறது.

புதுச்சேரி, லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இணையாக, சர்வதேச தரத்துடன் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம், 56 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கல்வித்துறை சார்பில், கட்டப்பட்டது. நீள் வட்ட வடிவில் அமைக்கப்பட்ட, ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தின் நடுவே, ஹாக்கி ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஸ்கேட்டிங் மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காலை, மாலையில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் உடன் வருகின்றனர்.

ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் உள்ள பார்வையாளர் மடத்தில் அமர்ந்து தாங்கள் கொண்ட வந்த ஸ்நாக்ஸ், உணவுகளை சாப்பிடுகின்றனர். அப்படியே அந்த கேரி பைகள், திண்பண்டங்கள், பிளாஸ்டிக் பாட்டீல்களை பொறுப்பு இல்லாமல் வீசி செல்கின்றனர். இதனால் ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் குப்பைகள் அலங்கோலமாக சிதறி கிடக்கிறது. குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.

புதுச்சேரியில் திறமையான ஸ்கேட்டிங் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் ஸ்கேட்டிங் மைதானம் உருவாக்கி, அசோசியேஷன், சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கும் சங்கங்கள் எந்த பொறுப்பும் இல்லாமல் அப்படியே குப்பைகளை கண்காட்சிக்காக விட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வழியாக வாக்கிங் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

ஸ்கேட்டிங் மைதானத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அப்படி இருக்கும்போது ஸ்கேட்டிங் மைதானம் அலங்கோலமாக கிடப்பதை சங்கங்கள் ஏன் வேடிக்கை பார்க்கின்றன. அந்த சங்கங்களின் அனுமதி ரத்து செய்தால் என்ன ஆகும். ஆபத்தான முறையில் தெருவில் தான் ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்க நேரிடும்.

இனிமேலாவது சமூக பொறுப்புடன் ஸ்கேட்டிங் மைதானத்தினை சுற்றிலும் குப்பைகள் இல்லாதவாறு சங்கங்கள் பார்த்து கொள்ள வேண்டும். சமூக பொறுப்பு என்பது ஸ்கேட்டிங் சங்கங்களுக்கு மட்டும் அல்ல; பொதுமக்களுக்கும் இருக்கிறது.

பொதுமக்களும் குப்பைகளை ஸ்கேட்டிங் மைதானத்தில் போடாமல் குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.

குப்பை தொட்டி எங்கே

லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் வருகின்றனர். ஆனால் ஸ்கேட்டிங் மைதானத்தில் ஒரு குப்பை தொட்டி கூட இல்லை. இதனால் ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் குப்பைகளை வீசி செல்கின்றனர். ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் குப்பை தொட்டி வைத்தால் மட்டுமே சுகாதார சீர்கேடு தடுக்கப்படும். குப்பை தொட்டி வைக்க உழவர்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மின் இணைப்பு தேவை

லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தையொட்டி உள்ள ெஹலிபேட் மைதானம் இருளில் மூழ்கி கிடக்கிறது. வாக்கிங் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்தனைக்கும் இரண்டு இடங்களில் ைஹமாஸ் விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தும் பயனில்லை. மின் இணைப்பு கொடுக்காமல் பொதுப்பணித் துறை மவுனமாக உள்ளது.இருள் சூழ்ந்ததும் ஹெலிபேட் மைதானத்தில் சமூக விரோதிகள் கும்பலாக வந்து மது அருந்துகின்றனர். மேலும் இரண்டு இடங்களில் ைஹமாஸ் விளக்கு போட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மின் இணைப்பு கொடுக்கலாம் என, பொதுப்பணித்துறை நினைக்கிறது. அதற்குள் அப்பகுதியில் சமூக விரோதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு கொலைகள் நடக்க வாய்ப்புள்ளன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் தற்போதுள்ள இரண்டு ைஹமாஸ் விளக்கிற்கும் மின் இணைப்பு கொடுக்க பொதுப்பணித்துறை, உழவர்கரை நகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us