Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோடையை முந்திக்கொண்ட மின்தடை பாகூர் பகுதி மக்கள் அவதி

கோடையை முந்திக்கொண்ட மின்தடை பாகூர் பகுதி மக்கள் அவதி

கோடையை முந்திக்கொண்ட மின்தடை பாகூர் பகுதி மக்கள் அவதி

கோடையை முந்திக்கொண்ட மின்தடை பாகூர் பகுதி மக்கள் அவதி

ADDED : மார் 22, 2025 09:50 PM


Google News
கோடை காலம் துவங்கும் முன்னரே, கிராமப்புறங்களில் முந்திக்கொண்டு செல்லும், மின்தடை பிரச்னையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைளை, மின்துறை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் மற்றும் முள்ளோடையில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, பாகூர், சேலியமேடு, காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், குருவிநத்தம், பிள்ளையார்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த துணை மின் நிலையங்களில் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் புதுப்பிக்கப்படாமல் பழைய நிலையிலேயே உள்ளதால், அடிக்கடி பழுதடைந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோடை காலம் துவங்கும் முன்னரே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால், ஏ.சி., பிரிட்ஜ், மின்விசிறி போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவ்வப்போது திடீர் மின்தடை ஏற்படுகிறது. இதனால், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பாகூர், சேலியமேடு, கிருமாம்பாக்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது.

ஊழியர்கள் பற்றாக்குறையால், மின் பழுதுகளை சீரமைக்க தாமதம் ஏற்படுகிறது. இதுவும் மின் தடை பிரச்னைக்கு ஒரு காரணமாக உள்ளது. மின் தடை சரி செய்யப்பட்டாலும் கூட, நாள் முழுதும் குறைந்த மின் அழுத்த பிரச்னை நீடிக்கிறது. இப்பிரச்னை இரவு நேரங்களில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. மின் விசிறிகள் கூட, சுழல முடியாமல், தட்டு தடுமாறி இயங்குவதால், துாக்கம் இழந்து, பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுவது வழக்கம் தான்.

இம்முறை கோடை காலம் துவங்கும் முன்னரே மின்தடை பிரச்னை முந்தி கொண்டு வந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மின்தடை பெரிய அளவில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கோடை கால மின் தடை பிரச்னையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைளை மின்துறை மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us