/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாஜி அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாஜி அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாஜி அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாஜி அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 06:54 AM

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் தேசிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முனுசாமி, நடராசன், சண்முகம், பிரேமதாசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 8வது ஊதிய குழுவிற்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றை காரணம் காட்டி, ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.ஆர்., நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.