Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹோலி பிளவர்ஸ் பள்ளி பொது தேர்வுகளில் சாதனை

ஹோலி பிளவர்ஸ் பள்ளி பொது தேர்வுகளில் சாதனை

ஹோலி பிளவர்ஸ் பள்ளி பொது தேர்வுகளில் சாதனை

ஹோலி பிளவர்ஸ் பள்ளி பொது தேர்வுகளில் சாதனை

ADDED : மே 21, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் ஹோலி பிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவி சோனா 600க்கு 583 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஜெகப்ரியா 579 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், தருண் பிரசாத் 569 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியளவில் மாணவி ரேஸ்மா 500 க்கு 483 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். யுவஹாசினி 481 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஹரிணி 478 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில் பரணிதரன், சவுந்தர்யா ஆகியோர் முதலிடமும், ஹரிஹரன், காவியா இரண்டாமிடமும், தர்ஷினி, லக் ஷயா மூன்றாமிடம் பெற்றுள்ளனர். பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி குழும சேர்மன் வெங்கடேசன், பள்ளி இயக்குனர் விஷ்னு பிரியன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சேர்மன் கூறுகையில் எமது பள்ளி நகரப்பகுதி பள்ளிக்கு இனையாக செயல்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு பிளஸ் 1 வகுப்பில் கட்டணச்சலுகை வழங்கப்படும். இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us