/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க காவலை மீறிய போதை ஆசாமி முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க காவலை மீறிய போதை ஆசாமி
முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க காவலை மீறிய போதை ஆசாமி
முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க காவலை மீறிய போதை ஆசாமி
முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க காவலை மீறிய போதை ஆசாமி
ADDED : மே 22, 2025 02:48 AM

புதுச்சேரி:போலீஸ் காவலையும் மீறி, புதுச்சேரி முதல்வர் காலில் விழ ஓடி வந்த, போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. முருகா தியேட்டர் சந்திப்பில், ராஜிவ் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது ஒருவர், முதல்வர் ரங்கசாமியை நோக்கி, திடீரென வேகமாக ஓடி வந்து, ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என, கும்பிட்டபடி குனிந்து நின்றார். இதில், பதற்றமான பாதுகாப்பு அதிகாரி, அந்த நபரை மடக்கி பிடித்தார். போதையில் இருந்த அவர், போலீசாரின் பிடியை மீறி, முதல்வரின் காலில் விழுவதிலேயே குறியாக இருந்தார்.
இதையடுத்து, அவரை ஓரங்கட்டி சோதனை செய்ததில், பயப்படும்படி எதுவும் இல்லை என்ற பின், நிம்மதி அடைந்தனர்.
விசாரணையில், அவர் மதுரையைச் சேர்ந்த அழகர் என்பதும், புதுச்சேரியில் ஒரு ஹோட்டலில், சமையல் மாஸ்டராக வேலை செய்வதும் தெரிந்தது. மேலும், புதுச்சேரி முதல்வரின் எளிமை பிடித்ததால், அவரிடம் ஆசீர்வாதம் வாங்க ஓடி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த போதை ஆசாமியை கடிந்துகொண்ட போலீசார், முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து, அவரை ஆசீர்வாதம் பெற வைத்தனர்.