/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவல் துறையினருக்கு பேட்மிட்டன் போட்டி காவல் துறையினருக்கு பேட்மிட்டன் போட்டி
காவல் துறையினருக்கு பேட்மிட்டன் போட்டி
காவல் துறையினருக்கு பேட்மிட்டன் போட்டி
காவல் துறையினருக்கு பேட்மிட்டன் போட்டி
ADDED : மே 22, 2025 03:20 AM
புதுச்சேரி: இந்திய ரிசர்வ் பட்டாலியன் சார்பில், பிட் இந்தியா கேம்பியன் மூலம் பேட்மிட்டன் போட்டி நடந்தது.
புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, இந்தியா ரிசர்வ் பட்டாலியன் காவல்துறையினருக்கு, பேட்மிட்டன் போட்டி இ.சி.ஆரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியில் நடந்தது.
போட்டியினை சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, துணை காமண்டண்ட் சுபாஷ், தலைமை தாங்கினர். உதவி காண்டன்ட் ராஜேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில், 30க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.பி.என். போலீசார் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியின் மூலம் ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு மன அழுத்தம் குறையும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.